யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

15 ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 24.01.2025 அன்று ஆரம்பமானது. ரில்கோ விடுதியில் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்ட காட்சிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதன் பின்னர் கண்காட்சிக் கூடங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.

ரில்கோ விடுதியில் இடம்பெற்ற அரங்க நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், 30 ஆண்டு காலப் போர் காரணமாக வடக்கு மாகாணம் பலவற்றை இழந்துள்ளது. தொழில்துறை, வேலை வாய்ப்பு என்பனவும் அதனுள் அடங்குகின்றன. எமது பகுதியைப் பொறுத்தவரையில் அரசாங்க வேலை மாத்திரமே இருந்து வந்தது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து இங்கு முதலீடு செய்வதற்கு பலர் வந்தாலும் அவர்களில் பலர் திரும்பிச் சென்றுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் முதலீடு செய்யவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் சூழல் மாறியுள்ளது. முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக முதலிட விரும்புகின்றனர்.

போருக்கு முன்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்குச் சென்றனவோ அதேபோல மீண்டும் நிலைமை ஏற்படும் சூழல் தெரிகின்றது. விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கு அதிகரிக்கின்றன. இதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று தொழில்நுட்பங்களை நவீன இயந்திரங்களையும் எமது உற்பத்திப் பொருட்களையும் பெருக்குவதற்குப் பயன்படுத்தவேண்டும். சகல வழிகளிலும் சாதகமான சூழல் நிலவும் நிலையில் அதனைப் பயன்படுத்தி எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும், என்றார் ஆளுநர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects