மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷின் ஏற்பாட்டில் 28.01.2025 அன்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், எஸ்.எம்.நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










