லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் , ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை ரூ. 6 இனாலும் , ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்புஅரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் புதிய விலைகள் வருமாறு சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகும்.
ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகும்.சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாய்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇