தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் அருள்மொழி நிஷாந்தி தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாநாட்டு மண்டபத்தில் 08.02.2024 அன்று இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
புதுக்குடியிருப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிக்கற்கைகளையும், தகவல் தொழில்நுட்பம், தையல், அழகுக்கலை போன்ற ஆறு மாத தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மூன்றாம் நிலை தொழிற்கல்வியானது மாணவர்களை சிறப்பு தேர்ச்சி மிக்கவர்களாக மாற்றுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.
சுயதொழில், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் H .U.சுசந்த, புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என்.குகதாஸ் மாகாண பணிமனை உதவிப்பணிப்பாளர் ஜனாப் முபாறக்கலி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் மா.சசிக்குமார், கி.சதீஸ்வரி, அ.தயாசீலன், ஓட்டமாவடி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் எ.எம் கனீபா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










