தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகள் அளவு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்திலிருந்து தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளின் அளவும் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மழைக்காரணமாக மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்தமையே இதற்கான காரணம் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,300 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு கிலோகிராம் கரட்டின் மொத்த விற்பனை விலை 900 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 900 ரூபாவிற்கும், புடலங்காய் மற்றும் பீர்க்கங்களாய் ஒருகிலோகிராம் 200 ரூபாவிற்கும் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…