“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“அழகான நாடு” “புன்னகைக்கும் மக்கள்” என்னும் தொனிப் பொருளின் “கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைதிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மற்றுமொரு சிரமதானப் பணி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊத்துசேனை கிராமத்தில் வீரநகர் தமிழ் கலவன் பாடசாலையில் 25.02.2025 அன்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வறுமைக் கோட்டில் வாழும் 15மாணவர்களுக்கு அகபா பவுண்டேஷன் அணுசரனையில் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிராம மக்கள் வேண்டிக் கொண்டதற்கினங்க அகபா பவுண்டேஷன் அணுசரனையில் தற்காலிக தீர்வாக சிறிய குடிநீர் திட்ட தொகுதி ஒன்றும் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் மாணவர்களினால் “நீரின் முக்கியத்துவம்” பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி திருமதி . வி. சுலக்ஸ்னா உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects