இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு 1.3 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் பொருள் ஏற்றுமதி வருமானமானது 3.51 சதவீத வளர்ச்சியாகவும், விவசாய ஏற்றுமதி வருமானமானது 14.87 சதவீத வளர்ச்சியாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய , இந்த வருடத்தின் முதலாம் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 1334.19 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










