குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் 37 குடும்பங்களைச் சேர்ந்த 149 பேர் இதுவரையில் 11.05.2026 அன்று வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, மேல்,சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
அத்துடன், மழையுடனான காலநிலை தொடர்வதால் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, பதுளை, களுத்துறை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதற்கட்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பசறை பிரதேசத்தில் ஒருசில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










