அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள், இன்று (02.05.2024) நண்பகல் 12 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க S.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇