சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குறித்த விசேட பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 க்கு பலாங்கொடையில் இருந்து புறப்படும் பேருந்து பொகவந்தலாவ வீதியின் ஊடக நோர்வூட் பிரதான நகரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நல்லதண்ணியை சென்றடையும் என பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇