கடுக்காமுனை, புழுக்குணாவி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் 06.03.2025 அன்று இடம் பெற்றது.
இப் பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்கள், காப்புறுதி, அறுவடைபோன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனடிப்படையில் 30.03.2025 அன்று விதைப்பு ஆரம்பமாகி 10.04.2025 இல் விதைப்பு முடிவுறுத்துவது எனவும், அறுவடை ஆரம்பமாகும் திகதியாக 25.07.2025 எனவும், அறுவடை முடிவுத்திகதி 30.07.2025 என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இச்சிறுபோகத்தின் போது 3 1/2 மாத நெல்லினம் விதைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே.பிரதீபன், நீர்பாசன பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










