இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள தபால் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக தபால் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 07.02.2025 அன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.
இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் துறையை மாற்ற இந் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










