நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 4 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குடும்ப அடிப்படையிலான தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.
இத் திட்டத்தின் கீழ் குடும்பங்கள் தென்னங்கன்றுகளைக் கோரமுடியுமெனத் தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.


![]()










