மட்டக்களப்பு மாவட்ட உளநல மதிப்பாய்வு கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் உளநல மருத்துவ சேவைகள் மதிப்பாய்வு செய்யும் வருடாந்த மதிப்பாய்வு கூட்டம் 17.03.2025 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள Dr. சதுர்முகம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய உளநலப் பணிப்பாளர் வைத்தியர் எல்.என்.மகோதரட்ன, சமூக நல ஆலோசகர் வைத்தியர் யமுனா எல்லாவேலா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவ நிபுணர்கள் வைத்தியர் ரீ.கடம்பநாதன், வைத்தியர் ஆர்.கமல்ராஜ், மட்டக்களப்பு பிராந்திய உளநல மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள், கல்வித்துறைசார் அதிகாரிகள் மற்றும் அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பிராந்திய உளநலப் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர் டான் சௌந்தரராஜா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த மீளாய்வு கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உளநல சேவைகள் மற்றும் முன்முயற்சிகளை மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் நடந்தது. கூட்டத்தின் முக்கிய நோக்கமாக கொள்கை அமுலாக்கம் மற்றும் ஆய்வு, பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உளநல சேவைகளின் சிறப்பாக செயல்படுத்தப்படுவது குறித்து திடமான தெளிவு வழங்குவது இருந்தது.

இந்த கூட்டத்தில், பிராந்திய தாய் சேய் நலப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் அவர்களினால் பாலின அடிப்படையிலான வன்முறை, வீட்டு வன்முறை மற்றும் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு போன்ற முக்கிய விடயங்கள் பேசப்பட்டன.

மேலும், இந்த கூட்டம் உளநல மருத்துவ சேவைகளின் முக்கியத்துவத்தை, அவற்றின் முன்னேற்றங்களை மற்றும் சமூகத்தில் உள்ள சவால்களைத் துல்லியமாக பகிர்ந்துகொள்ள உதவியது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects