ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டின் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் ஆ.ளு. சமி நவாஸின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டின் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் , பரீட்சை நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பகல் நேரத்தில் வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை உட்புறங்களில் மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகையை பிற்பகல் 1.00 மணிக்கு நிறைவு செய்யுமாறும் குறித்த திணைக்களம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇,R

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects