பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று காலை ஹீல் ஓயா மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரதம் காலை 10.15 மணியளவில் தடம் புரண்டதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக பிரதான மார்க்க புகையிரத சேவைகள் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும், இந்த புகையிரதம் நான்கு முறை தடம் புரண்டுள்ளது. புகையிரதம் தடம் புரண்டதைத் தொடர்ந்து பிரதான மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇