மண்முனை தென் எருவில்பற்றில் இடம்பெற்ற வெற்றுக் கொள்கலன்கள் சேகரிக்கும் செயற்றிட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் சமூகத்திற்கு தீங்கிளைக்கும் வண்ணம் காணப்படும் வெற்றுக் கொள்கலன்களை அகற்றும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னமின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் (2024.02.09)அன்று இடம்பெற்றது.

இதன்போது கோட்டைக்கல்லாறு பொதுவிளையாட்டு மைதானம் மற்றும் கோட்டைக்கல்லாறு கிராமத்தின் நீரேந்தும் பகுதிகளை அண்டிய பிரதேசங்கள் போன்ற பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழக உறுப்பினர்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது.

பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் களுதாவளை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கேற்ப்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects