வடக்கு புகையிரத சேவை நேர அட்டவணையில் திருத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதிபுகையிரதம் , இன்று (07.07.2025) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி புகையிரதம் புறப்படும் நேரமும் இன்று முதல் திருத்தப்பட் டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து புகையிதம் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects