சுற்றுலாப் பயணிகள் நடமாடுவதால், சிகிரியாவில் பாதுகாக்கப்பட்டுள்ள பழங்காலச் சுவர்களில் 70 சதவீதமானவை அழிந்துவிட்டதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
புராதன சுவர்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பல சுற்றுலா பயணிகள் சுவர்களை சேதப்படுத்துவதால், பழமையான செங்கல் சுவர்களை புதுப்பிக்க வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுகிறது.
உலக பாரம்பரிய சின்னமான சிகிரியாவில் பிளாஸ்டிக் போத்தல்கள் கொட்டப்படுவதால் அதனை சுற்றியுள்ள சுற்றுச்சூழழும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇