மட்டக்களப்பு கிரானில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை மற்றும் விஷேட பொதுமக்கள் சேவைத் திட்டங்களை செயற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (11.12.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பி.நிருபாவின் ஏற்பாட்டில் கிரான் புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பொதுமக்களுக்கான சுகாதார சேவை வழங்கும் நடமாடும் சேவையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொது மக்கள் குறித்த ஆயுள்வேத மருத்துவ முகாமிற்கு வருகைதந்ததுடன், தமக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக்கொண்டதுடன், நீராவி மூளிகை மருத்துவத்துவம், ஆயுள்வேத மசாஜ் போன்ற மருத்துவ தேவைகளும் இதன் போது வழங்கப்பட்டது.

மேற்படி நடமாடும் சேவைக்கான கணனி முறைமையானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் உத்தியோகத்தர் கே.லக்ஷிகா மற்றும் உதவியாளர் ஜே.நிமாஜினி ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு கணனி முறைமையினூடாக தரவுகள் உள்ளடக்கப்பட்டதுடன், குறித்த நடமாடும் சேவையில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.லோகினி, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஆயுள்வேத திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நாளை (12) கிரான் ரெஜி மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் தொடர்பாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 13 ஆம் திகதி முருக்கன் தீவில் சுற்றாடல் சார் நடமாடும் சேவையும், 15 ஆம் திகதி ஊத்துச்சேனையில் சுகாதார துறை சார்ந்த நடமாடும் சேவையும், 16 ஆம் திகதி கிரான் ரெஜி மண்டபத்தில் அனைத்து திணைக்களங்கள் சார் நடமாடும் சேவையும், அதனைத் தொடர்ந்து மறுநாள் 17 ஆம் திகதி ரெஜி மண்டபத்தில் கலாசார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects