தேசிய யூடோ போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று முல்லைத்தீவு மாவட்டம் வெற்றிபெற்றது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேறாங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை, 2025 ஆம் ஆண்டு தேசிய யூடோ போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று முல்லைத்தீவு மாவட்டம் வெற்றிபெற்றுள்ளது.

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தேசிய யூடோ போட்டி, கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தேறாங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர் யதுர்ஷன், 66 கிலோவுக்கு மேல் நிறைப்பிரிவில் பங்கேற்று தேசிய வெண்கலப் பதக்கத்தை வென்று, பாடசாலை, கல்வி வலயம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு, பாடசாலையின் பயிற்றுநர் ர. லக்சன் மாணவருக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கியதுடன், பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம் ஆதரவு மற்றும் ஊக்கம் வழங்கியிருந்தர் என தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects