2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 13.07.2025 அன்று வரையான காலப்பகுதிக்குள் 12 இலட்சத்து 47 ஆயிரத்து 815 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 258,323 ஆகும்.
இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 116,432 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 113,493 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 78,462 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 71,000 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸ்சிலிருந்து 65,560 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 56,137 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









