இலங்கையில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் பிரகாரம் கோட்டை, கொழும்பு பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
“சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவும் நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுகிறது, மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கு பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் தொடரும் மழையுடனான வானிலையால், நுளம்புகள் பெரும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










