மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் இன்று (24/03/2025) முதல் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அதன் பிரகாரம் அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
இதேவேளை கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மேலும் இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
அத்தோடு இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
அதுமட்டுமல்லாமல் காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
அதன் பின்னர் காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலதிசி, மீனகயா புகையிரதங்களில் முதல் வகுப்பு ஏசி (AFC) மற்றும் மூன்றாம் வகுப்பு ஒதுக்கப்பட்ட (TCR) இருக்கைகள் மாத்திரமே முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உதயதேவி புகையிரதத்தில் இரண்டாம் வகுப்பு மாத்திரமே முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










