இன்று முதல் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு புகையிரதத் திணைக்களம் இன்று (28.03.2025) முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான புகையிரத சேவைகளை முன்னெடுக்க புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள புகையிரத சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று (28.03.2025) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது.

அதே போன்று, குறித்த புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர, கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவையானது காலை 5.15க்கு புறப்படவுள்ளது.

அந்த புகையிரதம் திருகோணமலை புகையிரத நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects