LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் பெண்களுக்கான நிலையான வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி எனும் நோக்கில் களுவாஞ்சிக்குடி எருவில் தெற்கு பகுதியில் இயங்கி வரும் விகிதா கைத்தறி நிலையத்திற்கு சில உபகரணத்தொகுதிகள் வழங்கப்படுவதனூடாக குறைந்த பட்சம் 4 பெண்களுக்கான நிலையான வேலைவாய்ப்பை உறுதிசெய்யப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி எருவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள விகிதா கைத்தறி நிலையத்தினை 27.03.2025 அன்று SCOT மற்றும் LIFT நிறுவனத்தினர் பார்வையிட்டனர்.
விகிதா கைத்தறி நிலையமானது களுவாஞ்சிக்குடி எருவில் தெற்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. குறித்த கைத்தறி நிலையத்திற்கு SCOT UK நிறுவனத்தின் நிதி அனுசரனையில், LIFT நிறுவனத்தின் ஊடாக மேலும் சில உபகரணங்கள் வழங்கப்பட்டு புதிதாக பெண்களை உள்வாங்கி பயிற்சிகள் வழங்குவதன் ஊடக பெண்களுக்கான நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினாலும் கைத்தறி நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர், திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன், LIFT நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன், LIFT நிறுவன நிதிப்பணிப்பாளர் நடராஜா ஜெபராஜா, SCOT நிறுவனத்தின் பிரதிநிதி அன்டன் கனகசபை மற்றும் கைத்தறி நிலைய உத்தியோகத்தர்கள், திட்டப் பயனாளிகள், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்றதொரு வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிலும் SCOT மற்றும் LIFT நிறுவனத்தினால் கடந்த வருடம் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










