மட்டக்களப்பில் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்தல் – சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளிகளை சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வலுப்படுத்தல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

முன்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் கலந்துரையாடலானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கான பொறுப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், உதவிபிரதேச செயலாளர்கள், மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், தாதியர்கள், குடும்ப நல சுகாதார மாது உத்தியோகத்தர்கள், பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects