சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் ஓட்டமாவடி மேற்கு சமுர்த்தி வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாஹுல் ஹக் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.மதியழகன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் 150 சமுர்த்தி பயனாளிகளுக்கும், அஸ்வெசும பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇