அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 புதிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு முதல் 12 நாட்களில் சுமார் 30,000 புதிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நன்மைகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் மேலும் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects