அதிக செல்போன் பாவனையினால் ஆபத்து – ஸ்பெயின் ஆய்வின் முடிவு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களின் பாவனையில்  அதிகம் மூழ்கிக்கிடக்கிறார்கள் 

ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்களின் பாவனை அதிகரித்துள்ளது. இந் நிலையில் பாவனையின் அதிகரிப்பால் ஆபத்துக்களும் அதிகரிக்கின்றது.

இதன் பாவனையால் ஏற்படும் ஆபத்து குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 

இவ் ஆய்வின் அடிப்படையில், 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர். 

ஆய்வின் முடிவில் அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு மன நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் அதிக அளவில் தொலைபேசி பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும், ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கையடக்க தொலைபேசி பாவனையால் பதற்றத் தன்மை, மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும் தற்கொலை எண்ணம் போன்றவை அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.  

இளைய தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாற்றுவழியிலான  ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects