2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப் பரீட்சையில் 333,183 மாணவர்கள் தோற்றினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்களாகவும் , 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகளாகவும் காணப்பட்டனர்.

இப் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

உயர் தரப் பரீட்சையின் செயல்முறை பாடங்களுக்கான பரீட்சைகளானது கடந்த பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects