சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புகையிரதத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கலிப்சோ புகையிரத சேவை 08.04.2025 அன்று காலை 8.10க்கு நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
இந்த கலிப்சோ புகையிரத சேவை 08.04.2025 அன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் நானுஓயாவில் இருந்து பதுளை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாட்களில், கலிப்சோ புகையிரத சேவை, பண்டாரவளையிலிருந்து பதுளை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
கலிப்சோ புகையிரதம் தெமோதரை, இதல்கஸ்ஹின்ன மற்றும் எல்ல ஒன்பது வளைவு பாலம் ஆகிய இடங்களில் தலா 10 நிமிடம் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அப் பகுதியைப் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










