நாட்டில் தேங்காய் விலை தற்போது குறைவடைந்துள்ளமையை மக்கள் வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக, கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை 220 முதல் 250 ரூபாய் வரையில் காணப்பட்ட நிலையில் தற்போது அது 130 தொடக்கம் 185 ரூபாய் வரையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், அண்மைக் காலமாக நாட்டில் ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவுக்கும் மேல் காணப்பட்ட நிலையில், தற்போது தேங்காய் விலை குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டில், ஏறக்குறைய 555 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு , தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி முயற்சியின் கீழ், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் கப்பல் ஒன்று கடந்த 03 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










