அதிக சீனி ஆரோக்கிய பிரச்சினைக்கு வழி வகுக்குமா?
இனிப்பு, காரம், உப்பு அனைத்துமே சரி சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில் ஆய்வொன்றில் அதிக அளவான இனிப்பு கலந்த உணவுகளை குழந்தைகள் உண்பதால் பல நோய்களுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் அதிகளவான இனிப்புகளை உண்பதனால் உடல் பருமன், இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
அதிகமான சீனியை உட்கொள்ளும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதலுக்கும் உள்ளாகின்றனர்.
அதிக இனிப்புகளை உட்கொள்வதால் குழந்தைகளின் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மூளையின் செயல்பாடும் குறைவடையும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் சீனி அதிகம் இருப்பதால் அதனையும் குறைத்துக்கொள்வது நல்லது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










