கடுமையான வெப்பத்தினால் ஏற்படக்கூடிய Heatstroke எனும் ஆபத்து!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போது நிலவும் கடுமையான வெப்பத்தை இலகுவாக எண்ணாதீர்கள் Heatstroke என்பது மிகவும் ஆபத்தானது.

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?

ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு அவசர மருத்துவ நிலை.

இந்த நிலையில் உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிக்கிறது, மேலும் சூரிய வெளிப்பாட்டுக்கு உட்பட்டால், உடல் தனது சாதாரண வெப்பநிலையை தானாகவே கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

பொதுவாக, நமது உடல் அதிக வெப்பத்தை வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வருகிறது. ஆனால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், உடல் அதை ஈடு செய்ய முடியாமல் தடுமாறுகின்றது.

யாருக்கெல்லாம் அபாயம்?

♦️குழந்தைகள்
♦️முதியவர்கள்
♦️நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்கள்
♦️வெளிப்புறத்தில் பணிபுரிபவர்கள்

கோடை காலத்தில் இது மிகவும் பரவலாக ஏற்படும். உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால், இது உள்ளுறுப்பு சேதம் மற்றும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படும் ஒருவர் பின்வரும் அறிகுறிகளில் பலவற்றைக் கொண்டிருக்கலாம்:

  • வேர்வையின்மை, சிவந்த, சூடான அல்லது வறண்ட சருமம்
  • மூச்சுத்திணறல்
  • மயக்கம்
  • சோர்வு
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலைவலி
  • அதிகரித்த இதய துடிப்பு
  • குழப்பம் மற்றும் எரிச்சல்

ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உடல்நலத்தை காப்பாற்ற முக்கியமான சில எளிய வழிமுறைகள்:

  • தண்ணீர் நிறைய குடிக்கவும் – உடலில் நீரேற்றத்தை பராமரிக்க இது மிகவும் அவசியம்.
  • மெலிதான மற்றும் தளர்வான ஆடைகளை அணியவும் – வெப்பத்தை கட்டுப்படுத்த இது உதவும்.
  • சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும் – குறிப்பாக 12 மணி முதல் மாலை 3 மணி வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • தொப்பி அல்லது குடை பயன்படுத்தி தலை மற்றும் முகத்தை பாதுகாக்கவும்.

வெயிலில் எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் உடல்நலத்தைக் காக்கும் பொறுப்பு உங்கள் கைகளில்….

தகவல் : DH Thurai neelavanai – DHTN

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects