கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை சுங்கத்திற்கு கிடைத்த வருமானம் 109 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது. இது ஒரு மாதத்தில் சுங்கம் ஈட்டிய அதிகூடிய வருமானம் என சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார். மேலும், வரி வசூல் செயல்முறையை முறைப்படுத்தியமை மற்றும் செயல்திறனுடன் செயற்பட்டமை வருமானம் அதிகரிக்க முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு மொத்த சுங்க வருமானம் 925 பில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇