மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஃபுட் டிராப் (Foot Drop) எனும் பாதிப்பிற்குரிய நவீன நிவாரண சிகிச்சை….

எம்மில் சிலருக்கு திடீரென்று அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்படும். சிலருக்கு அவர்கள் நடக்கும் போது அவர்களின் பாதங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்காமல் தடையை உண்டாக்கும்.

குறிப்பாக பாதத்தின் முன் பகுதியை உயர்த்தி நடப்பதில் பாரிய அசௌகரியம் ஏற்படும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் ஃபுட் ட்ராப் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பிரத்தியேக உறை மூலம் நிவாரணம் கிடைக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலருக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும் அல்லது சமதளத்தில் நடக்கும் போதும் அவர்களது இடது அல்லது வலது காலில் உள்ள முன் பகுதியை உயர்த்தி சீராக செல்வதில் தடை ஏற்படும். இதனால் உங்களுடைய நடையில் மாற்றங்கள் உண்டாகும்.

இத்தகைய பாதிப்பிற்கு உங்களுடைய கால் பகுதியில் உள்ள நரம்புகளில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கலாம். மேலும் அப்பகுதியில் உள்ள தசைகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக உங்களுடைய பாதத்தை முழுமையாக ஒருங்கிணைத்து நடப்பதில் அசௌகரியம் உண்டாகிறது.

சிலருக்கு இத்தகைய பாதிப்பு தற்காலிகமாக ஏற்படும். வெகு சிலருக்கு இத்தகைய பாதிப்பு நிரந்தரமாகவும் ஏற்படக்கூடும். மாடி படிகளில் ஏறும்போது பாதம் உங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்காத நிலை ஏற்பட்டால்.. அதனை இத்தகைய பாதிப்பின் தீவிரமான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு காலின் முன்பகுதி மற்றும் கட்டைவிரல் பகுதியில் வலியும் உண்டாகும். சிலருக்கு அப்பகுதியில் உணர்வின்மையும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

வைத்தியர்கள் எக்ஸ்-‌ரே, அல்ட்ரா சவுண்ட் ,சிடி ஸ்கேன், எம் ஆர்‌ஐ ஸ்கேன், நரம்புகளின் இயங்குதிறன் குறித்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இதன்பிறகு பிரத்யேக அங்கி அல்லது உறையை அணிந்து கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இத்தகைய உறை முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறது. அதனுடன் இயன்முறை சிகிச்சையையும் இணைந்து அளித்து நிவாரணத்தை தருவார்கள்.

வெகு சிலருக்கு மட்டும் நரம்பியல் தூண்டுதல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பார்கள். மிகச் சிலருக்கு மட்டும் தான் இத்தகைய பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொண்டு சத்திர சிகிச்சையை செய்து கொள்ளலாம் என பரிந்துரையை வழங்குவர்.

வைத்தியர் ராஜ் கண்ணா

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects