அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01.05.2025) முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சேவை சில நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் முன்னோடித் திட்டம் கடந்த மாதம் 11 ஆம் திகதி கொட்டாவ மற்றும் கடவத்த சந்திப்புகளில் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










