அழகுசாதனப் பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்கள் இருப்பதாகவும், பாதரசம் போன்றவற்றை பயன்படுத்தி சில அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் அது தோல் புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைப் புள்ளிகள், முகம் சிவத்தல், முகப்பரு அனைத்தும் அழகுசாதனப் பொருட்களால் ஏற்படுவதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் இந்திரா கஹதவி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇