கூகுள், இந்தியாவில் தனது தேடல் ஆய்வக (Search Labs) சேவையின் மூலம் புதிய AI Mode அம்சத்தைப் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பயனாளர்களால் தனிப்பட்ட முறையில் “opt-in” செய்ய வேண்டிய சேவையாகும்.
இந்த ‘AI Mode’, பயனர்கள் சூழ்நிலை உணர்ச்சியுடன் கூடிய உரையாடல்களை நடத்தக் குரல் (voice) அல்லது டைப்பிங் (type) மூலம் கேள்விகளைக் கேட்டு, அந்தக் கேள்விகளுக்கு மனிதரின் பாணியில் கூர்மையான பதில்கள் வழங்கும் திறன் ஆகும்.
இச் சேவையில் காணப்படக்கூடிய முக்கிய அம்சங்களாவன,
Search Labs மூலம் opt-in செய்ய வேண்டும்.
தற்போதைய நிலையில் ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கும்.
குரல் மற்றும் படத் தேடல் அம்சம் இயங்குகிறது.
ஜெமினி (Gemini) 2.5 AI இன் மேம்பட்ட பதிப்பால் இயக்கப்படுகிறது.
இச் சேவையானது, கூகுள் I/O 2025 கண்காட்சி பிறகு, அமெரிக்காவிலிருந்து விரிவுபடுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் முதன்முதலாகப் பொதுமக்களுக்கான பரிசோதனையில் வந்துள்ளது.
இதன் மூலம், பயனர்கள் நீளமான மற்றும் ஆழமான கேள்விகளை 2-3 மடங்கு அதிகமாக முன்வைப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










