தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் 12.09.2025 அன்று நடைபெற்றது.

இதன் போது, தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சியினால் வழங்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமையின் பொறுப்புக்கள் தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன் மக்களுக்கு தகவல்களை வழங்கும் பொறுப்பு தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.

நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற முதல்வர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெப்ரல் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜிவகஜநாத், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects