கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 14.05.2025 அன்று 16,100 புள்ளிகளைத் தாண்டி வலுவான நிலையை பதிவு செய்தது.
உலகளாவிய பொருளாதார பதற்றங்கள் தணியும் ஏதுநிலைகள் உருவாகியுள்ளமையால், இந்த உயர்வு பதிவானதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதற்றம் தளர்த்தப்பட்டதன் மூலம் இந்த எழுச்சி உந்தப்பட்டுள்ளது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்றைய சந்தை நடவடிக்கையின் நிறைவில் 215.07 புள்ளிகள் அதிகரித்தது.
இதேபோல், S & P SL20 சுட்டெண் 76.23 புள்ளிகள் அதிகரித்து 4,734.03 ஆக நிறைவடைந்தது.
மொத்த சந்தைப் புரள்வு ரூ.3.36 பில்லியனாக பதிவானது.
மொத்தமாக 123.47 மில்லியன் பங்குகள் கைமாற்றப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










