மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22.05.2025) இடம் பெற்றது.

மாவட்டத்தில் விவசாயம், கால்நடை, கிராமிய அபிவிருத்தி மற்றும் பசளை வளங்கள் தொடர்பான கலந்துரையடல் இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விவசாயபணிப்பாளரினால் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்ட விடயங்கள் தொடர்பாக அளிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வின் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் சி.தனிநாயகம், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects