பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளுக்கு 30 வீத விலைக்கழிவு வழங்கப்படுவதாக தேசிய அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விலைக்கழிவில் அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக்கொள்ள பாடசாலை அதிபரின் கடிதத்துடன் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனம் அல்லது அதனது விற்பனைக் கிளைகளுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்களின் உத்தரவுகளுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.