தற்போதைய சூழ்நிலையில் உலகளவில் கோவிட்-19 பரவி வருவதால் பெரும்பாலான நாடுகள் எல்லா வகையிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொற்றுநோயால் உலகளவில் 5,792,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 357,480 பேர் இறந்துள்ளனர். மேலும் 2,499,151 பேர் குணமடைந்துள்ளனர். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் பல்வேறு துறைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக உற்பத்தி ரீதியாக நோக்கினால் மக்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது உள்ளது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்தால் இது தடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் இப்போது வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல், நுகர்பொருட்கள் இல்லாமல் உள்ளனர். பலர் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மைத் துறையில் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் உள்ளனர். இந்த நிலை காரணமாக ஏறத்தாழ 500,000 பேர் வேலைவாய்ப்ப்புகளை இழந்துள்ளனர். மேலும் அவர்களது குடும்பங்களும் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். ஏனைய தொழில்துறைகளில் உற்பத்தி இல்லாமல் தடைப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடை உற்பத்தி தொழில், கிட்டத்தட்ட 800,000 ஊழியர்கள் வருமானம் மற்றும் வேலை இல்லாமல் உள்ளனர். சிலர் பாதி சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே பெரும்பாலான குடும்பங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பலர் உள்ளனர். அவர்களுக்கு அதனை மீள செலுத்தி தீர்வு காணும் வழியும் தெரியவில்லை. இதற்கு தீர்வு இல்லாமல் அவர்கள் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட வாய்ப்Gக்கள் காணப்படுகின்றன..
மேலும் நகரங்களுக்கு இடையேயான ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதிகளும் இடை நிறுத்தப்பட்டன. எனவே பொருட்கள் மற்றும் மக்களின் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர், மேலும் போக்குவரத்துத் துறை மக்கள் எந்த வருமானமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது.
இதன் விளைவாக அரசாங்க நடவடிக்கை மற்றும் விதிமுறைகள் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பொருளாதார சூழ்நிலை காரணமாக வர்த்தகர்கள் தங்கள் தொழிலை மீண்டும் மேம்படுத்துவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே நேரத்தில், வெளிநாடுகளும் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் இடை நிறுத்துகின்றன. எனவே எதிர் வரும் மாதங்களில் நுகர்பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
தரவுகளின் படி விவசாயம், மீன்வளம், பால் பண்ணைகள் மற்றும் கால்நடை பண்ணைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக காணப்படுகிறது. இதன் காரணமாக. பொதுமக்கள் மேற்கண்ட பொருட்களை நுகர்வதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுகிறன.. எனவே நாடு முழுவதுமாக உற்பத்திகள் தடைப்பட்டதால் மொத்த தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாடுகளின் நிதி நிலைமை மற்றும் நிதியில் ஏற்றத்தாழ்வையும் பாதித்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க மற்றும் நோயைக் கட்டுப்படுத்த பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான சிறந்த தீர்வுகள் கிடைக்கப்பெற்று உலக மக்கள் அனைவரும் இந்த நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடும் காலம் விரைவில் வந்தடைய வேண்டும்.

கட்டுரையாளர்:
திவ்யசாமினி வின்சன்ட் டேவிட்
வர்த்தக பீடம்- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகம்
‘நீங்களும் எழுதலாம் குறுங்கட்டுரை‘ எனும் பகுதியில் உங்கள் கட்டுரைகளும் இடம்பெற வேண்டுமானால் சுமார் 300 சொற்கள் நீளம் கொண்ட உங்கள் கடடுரைகளை info.mathahu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0765588554 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்!
![]()










