மட்டக்களப்பில் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் செல்வி ஜஸ்மினின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (26.05.2025) இடம் பெற்றது.

மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையூடாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதார பொருத்தத்தை அடையாளம் காண்பதற்கான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, தென் எருவில்பற்று, கோறளைப்பற்று மேற்கு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அஸ்வெசும பயனாளிகளுக்கு பொருத்தமான வாழ்வாதார திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர், சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.ஏ.எம்.பஸிர், எம்.பாஸ்கரன், எம்.தீபன் ஆகியோர் வளவாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects