அஸ்வெசும திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்வரும் 06 ஆம்
திகதி முதல் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்த விசேட வாரம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சு கூறியுள்ளது.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்து, தாமதமின்றி தகுதியான பயனாளிகளுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த விசேட வாரம் அமுல்படுத்தப்படுகின்றது.
இதுவரையில் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காத குடும்பங்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇