மலையக புகையிரத மார்க்கத்தில் பலான மற்றும் கடுகண்ணாவ இடையே இன்று காலை பெரிய மரம் முறிந்து விழுந்ததால், கொழும்பு கோட்டை – பதுளை புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக புகையிரதக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இன்று அதிகாலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணத்தைத் தொடங்கிய பொடி மெனிகே புகையிரதம், பலான புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் புகையிரதங்கள் பதுளை புகையிரத நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் பயணத்தைத் தொடங்கும் என்று புகையிரதக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










