வைத்தியர்களுக்கான மேலதிக பணிநேர கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து புதிய சுற்றறிக்கை வெளியிடாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
26.05.2025 அன்று நடைபெற்ற சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின், முதல் பாதீட்டில் வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளைக் குறைக்க முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், பொது நிர்வாக அமைச்சு தொடர்புடைய திருத்தங்களை முன்மொழிந்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பின்னர் சுகாதார அமைச்சு, அந்த வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு வைத்தியர்களுக்கான மேலதிக பணிநேர கொடுப்பனவு விபரங்கள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
எனினும், அதில் ஏராளமான பிழைகள் மற்றும் குறைபாடுகள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த சுற்றறிக்கை ஒரு வாரத்துக்குள் திருத்தப்படவில்லையாயின் தங்களது சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கும் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










