யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுவரும் புதிய கடவுச்சீட்டு அலுவகத்தை, இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் 27.05.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இணைந்து கொண்டார்.
இதுவரை செய்யப்பட்ட வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சரிடம் அரசாங்க அதிபர் விரிவாக விளக்கமளித்தார். மேலும், கடவுச்சீட்டு பெற வருகை தரும் பொதுமக்கள் அமர்ந்து காத்திருக்கக்கூடிய முறையில் அமைக்கப்படவுள்ள கொட்டகையின் திட்டங்களையும், அலுவலகத்தில் பணியாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










